கோவை: இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கமான SRMU மற்றும் AIRF தலைமைகளின் சார்பில், கோவை ரயில் நிலையத்தில் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய ரயில்வே தொழிலாளர் சங்கமான SRMU மற்றும் AIRF தலைமைகளின் சார்பில், கோவை ரயில் நிலையத்தில் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர் பிரதிநிதிகள், தொழிலாளர் விரோதமான நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், 2023 ஆம் ஆண்டில் இருந்து வழங்க வேண்டிய சி.ஆர்.சி பதவி உயர்வுகளை அனைத்து பிரிவுகளுக்கும் காலதாமதம் இன்றி வழங்க வலியுறுத்தினர்.
அத்துடன், எட்டாவது உதய குழுவை (8th CPC) உடனடியாக அமைத்து, அதற்கான AIRF/JCM terms of reference உத்தரவாக வெளியிட வேண்டும் எனக் கோரப்பட்டது.
மேலும், மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட காலி இடங்களை நிரப்ப, ஆண்டுதோறும் RRB / RRC தேர்வுகளை நடத்தி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர் சங்க உறுப்பினர்கள், மற்றும் ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Ellarum sendhu moodna mill a ellam open panna solunga…bonus settlement kette ella mill ayum moodnangalla