கோவை: முதலமைச்சரா இருந்தாலும் சன்னியாசிகள் முன்பு தரையில தான் அமர வேண்டும் என கோவையில் அண்ணாமலை பேசியுள்ளார்.
கோவை ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதீனத்தில் குரு பௌர்ணமியை முன்னிட்டு ஆன்மீக புத்தகம் வெளியீட்டு விழா மற்றும் சமூக சேவையில் சிறந்த விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். முன்னதாக சிறப்பு யாக பூஜையில் கலந்து கொண்ட அண்ணாமலை சாமி தரிசனம் செய்து, மரக்கன்று நட்டு வைத்தார்.
அதன் பிறகு விருத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கிய அண்ணாமலை பேசும்போது,
விரைவில் ஆன்மீகம் கலந்த அரசு அமையும், ஒரு நாட்டிற்கு ராஜாவாக இருந்தாலும், அது முதலமைச்சராக இருந்தாலும் ஒரு சன்னியாசி முன்னாள் தரையில் தான் அமர வேண்டும் என்றார்.அதுபோல விரைவில் ஒரு ஆட்சி அமையும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.வி.எஸ் கல்வி குழுமங்களின் நிறுவனர் குப்புசாமி, பா.ஜ.க மாநில விவசாயிகள் அணி தலைவர் நாகராஜ் மற்றும் ஏராளமான ஆன்மீக பெரியோர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.





Comments are closed.