முதலமைச்சராகவே இருந்தாலும் தரையில் தான் அமர வேண்டும் – கோவையில் அண்ணாமலை பேச்சு!

கோவை: முதலமைச்சரா இருந்தாலும் சன்னியாசிகள் முன்பு தரையில தான் அமர வேண்டும் என கோவையில் அண்ணாமலை பேசியுள்ளார்.

கோவை ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதீனத்தில் குரு பௌர்ணமியை முன்னிட்டு ஆன்மீக புத்தகம் வெளியீட்டு விழா மற்றும் சமூக சேவையில் சிறந்த விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். முன்னதாக சிறப்பு யாக பூஜையில் கலந்து கொண்ட அண்ணாமலை சாமி தரிசனம் செய்து, மரக்கன்று நட்டு வைத்தார்.

அதன் பிறகு விருத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கிய அண்ணாமலை பேசும்போது,

Advertisement

விரைவில் ஆன்மீகம் கலந்த அரசு அமையும், ஒரு நாட்டிற்கு ராஜாவாக இருந்தாலும், அது முதலமைச்சராக இருந்தாலும் ஒரு சன்னியாசி முன்னாள் தரையில் தான் அமர வேண்டும் என்றார்.அதுபோல விரைவில் ஒரு ஆட்சி அமையும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.வி.எஸ் கல்வி குழுமங்களின் நிறுவனர் குப்புசாமி, பா.ஜ.க மாநில விவசாயிகள் அணி தலைவர் நாகராஜ் மற்றும் ஏராளமான ஆன்மீக பெரியோர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement
Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

Comments are closed.

Recent News

காலை உணவு திட்டத்தில் பயன்பெற்ற மாணவ மாணவிகள்- கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை…

கோவை: கோவை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தின்கீழ் கடந்த இரண்டு...

Video

ஒரு கையில் லேப்டாப் மற்றொரு கையில் பைக்- கோவையில் வைரல் வீடியோ…

கோவை: கோவையில் உயிரைப் பணயம் வைத்து பைக்கை ஓட்டிக் கொண்டே லேப்டாப்பில் வேலை செய்த நபரின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. ​கோவை, திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே மடியில் லேப்டாப்பை...