கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடம் மாற்றம்!

கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறையில் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தழகத்தில் உள்ள 34 தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலராக பணி உயர்வு பெற்றுள்ளனர்.

அதன்படி தர்மபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்த பாரதி கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொடக்கக்கல்வி மாவட்டக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்த மணிமால கோவை மாவட்ட பொள்ளாச்சி இடைநிலை மாவட்டக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பழனி ராணிப்பேட்டை தனியார் பள்ளி மாவட்டக் கல்வி அலுவலராகவும், சேலம் மாவட்டம் தொடக்கக்கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் ராஜூ திருப்பூர் மாவட்டம் தொடக்கக்கல்வி மாவட்டக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொடக்கக்கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் தங்கராசு சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொடக்கக்கல்வி மாவட்டக் கல்வி அலுவலராகவும், தர்மபுரி மாவட்டம் அரூர் மாவட்ட கல்வி அலுவலர் சின்னமாது நீலகிரி மாவட்டம் தொடக்கக்கல்வி மாவட்டக் கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp