Header Top Ad
Header Top Ad

பாஜக அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாது- தமிழிசை செளந்தரராஜன்

கோவை: பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படாது என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்…

தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர், பேசும்போது :-

தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் போது, இரண்டரை கோடி தொண்டர்களை சேருங்கள், 30% சேருங்கள், வீட்டிற்கு பத்து நிமிஷம் பேசுங்கள், அ.தி.மு.க செய்த துரோகங்கள் செய்யப் போகும் துரோகங்கள் என்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இது மிக, மிக வருத்தமான ஒன்று, 2026 தேர்தல் வருகிறது என்பதற்காக, 5 மாநகராட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் உடனே பதவி விலக வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.

Advertisement

Single Content Ad

அந்த பகுதி மக்களிடம் அவ்வளவு கொள்ளை அடித்து இருக்கிறார்கள் அந்த கவுன்சிலர்கள். அதனால் ஒரு மாதத்திற்குள் பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார். அப்படி என்றால் இவ்வளவு நான் இந்த கொள்ளை அடித்ததை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

உங்களுக்கு ஓட்டு வேண்டும் என்பதற்காக, இப்போது நீங்கள் பதவி விலக வேண்டும் என்று கூறுகிறீர்கள். ஆனால் இவ்வளவு நாள் நீங்கள் ஊழல் செய்து கொண்டு இருந்தீர்கள் என்பது தானே அதற்கு அர்த்தம். மிகுந்த வேதனையாக இருக்கக் கூடிய விஷயம், மணல் கடத்தல் ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்க வேண்டியது தற்போது 4000 ரூபாய் ஆகிவிட்டது, தற்போது மணல் கடைத்தலை முடித்து விட்டு ஜல்லி கடத்தலுக்கு சென்று விட்டார்கள். அனைத்து இடங்களிலும் குவாரிகளில் மணலாக்கி அதை கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். Maldives போன்ற பல இடங்களுக்கு கடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். இது மட்டுமில்லாமல் சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு நாமக்கல்லில் நடைபெற்று இருக்கிறது.

சிறுநீரகத்தை கூட கடத்தி இருக்கிறார்கள். திராவிட இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் நடத்தும் பிரம்மாண்ட ஒரு மருத்துவமனையில், முதலில் உடல் உறுப்பு தானம் பெறும்போது முதலில் ஒன்றை நம்முடைய மாநில மருத்துவமனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், ஆனால் அப்படி எல்லாமல் மற்ற இடங்களுக்கு அது விற்கப்படுகிறது..

இதுபோன்று அனைத்து ஊழல் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது ஸ்டாலின் எப்படி ? ஒரு வீட்டிற்கு சென்று 10 நிமிடம் பேசுங்கள் என கூறுகிறார்..

ஒரு மாபெரும் தலைவரை இவ்வளவு அவமானப்படுத்த முடியும் என்றால் இவர்களால் தான் முடியும். பேசுவதை அப்படியே விட்டுவிடுங்கள் என திருச்சி சிவா எம்.பி கூறுகிறார், பேசியதே தவறு என்று அவர் கருதவில்லை. தலைவரை இப்படி பேசியது, தவறு என்று ஸ்டாலின் கூறவில்லை, பலர் குளிர் காய காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என பேசுகிறார்.

ஒரு மாபெரும் தலைவரை கொச்சைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமில்லாமல் அவர்களின் இணையதளவாசிகள் மிகவும் புகைப்படங்களை பகிர்ந்து கொச்சைப்படுத்துவதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

இதற்கு திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரசும் பதில் சொல்லி தான் ஆக வேண்டும்.

நான் இங்கு கேட்கிறேன் காமராஜரை பற்றி சொல்வதற்கு உங்களுக்கு வேறு ஒன்றுமே இல்லையா?..

காமராஜர் இறக்கும்பொழுது நான் பள்ளிக் கூடம் படித்துக் கொண்டு இருக்கிறேன், முன்னாள் முதல்வர்கள் இறுதி மரியாதை செய்ததை கூட இவர்கள் பெருமையாக பேசுகிறார்கள்..

காமராஜர் எவ்வளவு பள்ளிக் கூடம், அணை கட்டினார் என்பதை பற்றி எல்லாம் பேசவில்லை.

ஆவடி தொழிற்சாலை, BHEl வேலைவாய்ப்பு போன்றவற்றையெல்லாம் சிவாவுக்கு கண்ணுக்கு தெரியாதா?..indi கூட்டணியில் செல்வப் பெருந்தகை சொன்னதைப் போல, திருச்சி வேலுச்சாமி சொன்னதைப் போல திருமாவளவன் ஏன் ? பேசவில்லை..

அ .தி.மு.க மற்றும் பா.ஜ.க வில் விரிசல் ஏற்பட்டு குருக்கிறதா என்று கேள்விக்கு,

காவி சாவி என சொல்லுகிறார், நீங்களெல்லாம் காவி அடித்துக் கொண்டு இருக்கும் போது, ஒன்றும் இல்லை, ஆனால் நாங்கள் கூட்டணி சேரும் போது மட்டும் உங்களுக்கு எங்கு இருந்து சிந்தனைகள் வந்து விடுகிறது.

திராவிடம் மாடல் ஆட்சி அவ்வளவு மிகவும் கேவலமாக நடந்து கொண்டு இருக்கிறது.

10 நிமிடம் பேசுவதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் வீடு, வீடாக வர போகிறார்கள். அப்பொழுது, பழைய ஓய்வூதிய திட்டம், டாஸ்மாக், மாசம் ஒரு முறை ரீடிங் எடுக்கிறேன் என சொன்னீர்களே அதெல்லாம் என்ன ஆயிற்று என மாறி, மாறி கேள்விகளை கேட்க வேண்டும். இவங்க பத்து நிமிடம் அவர்களைப் பற்றி சொல்வதற்கு பதிலாக வீட்டில் இருப்பவர்கள், அவர்களிடம் இருக்கக் கூடிய கேள்விகளை நிச்சயம் கேட்க வேண்டும். நீங்கள் போய் கேள்வியை, கேலியை வாங்கிக் கொண்டு தான் வரப் போகிறீர்கள் என்று கூறினார்.

விடுபட்டவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என முதல்வர் கூறி இருக்கிறார் என்ற கேள்விக்கு,

அக்கா, தங்கைகளுக்கு முதலில் நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

78 லட்சம் பேர் மகாராஷ்டிராவில் லட்சாதிபதியாக இருக்கிறார்கள். ஆக உங்களை லட்சாதிபதியாக வேண்டுமா ? உங்களுக்கு ஆயிரம் ரூபாயை கொடுத்து, டாஸ்மாக் மூலம் 6 ஆயிரம் ரூபாயை இழக்க தயாரா?. சகோதரி கனிமொழி சொன்னாரே நாங்கள் வந்தால் டாஸ்மாக்கை நீக்கி விடுவோம் என்று?. ஆயிரம் ரூபாயை கொடுத்து விட்டு உங்களிடம் இருந்து பத்தாயிரம் ரூபாயை பிடுங்கி கொள்வார்கள்..
இதை சகோதரிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க ஆட்சி வந்தால் நிச்சயம் அதை கட்டுப்படுத்துவோம் நாங்கள் கூட்டணியில் இருப்பதால் கட்டுப்படுத்த செய்வோம். ஸ்டாலினை போல் நாங்கள் முன்வாசலில் கொடுத்து விட்டு பின் வாசலில் பிடுங்குவதற்கு தயாராக இல்லை.

எடப்பாடி 1500 ரூபாய் கொடுக்கிறேன் என கூறி இருக்கிறார், அதைப் பெண்கள் எப்படி ? சேமிக்க வேண்டும் என்பதற்கான திட்டங்கள் நாங்கள் வைத்து இருக்கிறோம். நிச்சயமாக நல்லாட்சி தான் நடக்கும். எத்தனை மாநிலங்களில் நாங்கள் நல்லாட்சி தானே நடத்திக் கொண்டு இருக்கிறோம்..

அதேபோல தமிழகத்திலும் நல்லாட்சி நடக்கும்.

எத்தனை மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டு வந்து இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு,

அந்த மாநிலங்களில், தலைவர்கள் போய் கொடியை வாசலில் பிடித்துக் கொண்டு அகற்றி விடுவோம் என ஒருபோதும் கூறவில்லை. எதார்த்தமாக இருந்தார்கள்.. அங்கு மது கடைகள் குறைக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

தேசிய ஜனநாயக கட்சியோடு என்ன கூட்டணி வந்தாலும், பிரம்மாண்டமான கட்சி, கூட்டணி..indi கூட்டணிக்கு வேண்டுமென்றாலும் பிரேக்கிங் இருக்குமே தவிர, NDA கூட்டணிக்கு ஒருபோதும் பிரேக் இருக்காது என கூறி சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Latest Articles