கோவை: கோவையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் குறைகள் மற்றும் சேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி, அனைத்து மாவட்டங்களிலும் நவம்பர் மாதம் வரை வாரத்திற்கு 4 நாட்கள் தினமும் 6 இடங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இந்த சிறப்பு முகாமில் நகர்ப்புறங்களில் 13 துறைகள் கீழ் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளின் கீழ் 46 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கோவையில் கடந்த 25ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக 47,516 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், புதிய ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, மகளிர் உரிமைத்தொகை சொத்து வரி பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட 4,560 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்

இதனிடையே கோவையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலத்தில் 72,73வது வார்டுகளுக்கு ஏ.கே.எஸ் நகர், தீராபந்த் ஜெயின் பவனில் முகாம் நடைபெறுகிறது.
காரமடை நகராட்சியில் 11,12,14 வார்டுகளுக்கு ஆசிரியர் காலனியில் உள்ள மனுஸ்ரீ மஹாலிலும், மதுக்கரை நகராட்சியில் 7,8,9 ஆகிய வார்டுகளுக்கு குரும்பபாளையம் மஹாலட்சுமி மண்டபத்திலும் முகாம் நடைபெறுகின்றது.
கோவை செய்திகளை மொபைலில் பெற எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர். இணைய இங்கே சொடுக்கவும்👈
கிணத்துக்கடவு பேரூராட்சியில் 1,2,3,5,6,10 ஆகிய வார்டுகளுக்கு கிணத்துக்கடவு எம்.ஆர்.பி திருமண மண்டபத்திலும், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் அம்பாரம்பாளையம், நாய்க்கன்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு நஞ்சேகவுண்டன்புதூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்யாண மஹாலிலும்,
சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பாப்பம்பட்டி ஊராட்சிக்கு ஏ.வி.எம் மஹாலிலும் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தித்தகவலை கோவை மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.