Best phones under 30K: Amazon மற்றும் Flipkart நிறுவனங்களின் ஆபர் சேல் தொடங்கியுள்ள நிலையில், ரூ.20,000ல் இருந்து ரூ.30,000க்குள் உள்ள சிறந்த போன்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், அவற்றை வாங்குவதற்கான லிங்குகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களைக் கவரும் பல்வேறு சிறப்புச் சலுகைகளுடன் Amazon நிறுவனத்தின் Great Freedom Festival மற்றும் Flipkart நிறுவனத்தின் Freedom Sale தொடங்கியுள்ளன.
அடுத்த தினங்களுக்கு இந்த ஆபர்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Amazonல் SBI கிரெடிட் கார்ட்களுக்கு உடனடியாக 10% சலுகை வழங்கப்படுகிறது. Flipkartல் ICICI, BOB கார்டுகளுக்கு 10% சலுகை வழங்கப்படுகிறது.
இந்த ஆபர்களின் படி, ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 பட்ஜெட்டில் சிறந்த மொபைல் போன்களை இங்கே பார்க்கலாம்.
One Plus Nord CE4 Lite (5G)
உங்களுக்கு ரூ.20,000க்குள் மொபைல் வாங்கும் ப்ளான் இருந்தால், ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் புதிய அறிமுகமான One Plus Nord CE4 Lite மொபைல்.

8 GB+128 GB மற்றும் 8 GB+256 GB என்ற மெமரி அமைப்புகளில் நல்ல பில்ட் குவரலியிட்டியில் இந்த மொபைல் கிடைக்கிறது. மேலும், 5500 mAh பேட்ட சார்ஜர், 50MP Sony Camera ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Mega Blue, Orange, Super Silver, Ultra Orange ஏன்ற மூன்று வண்ணங்களில் இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது.
மொபைலை ஆர்டர் செய்ய:


OPPO F29 Pro 5G
OPPO நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய OPPO F29 Pro 5G மொபைல், அதிநவீன அம்சங்களுடனும், ஸ்லிம் மற்றும் ஸ்டைலான வடிவமைப்புடனும் அறிமுகமாகியுள்ளது.
இது ஒரு mid-range 5G ஸ்மார்ட்போன். ஆனால் high-end feel தரக்கூடிய திறன்களைக் கொண்டுள்ளது.

இந்த மொபைலில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
8GB RAM 128GB/256GB மெமரியுடன் கிடைக்கிறது. விரைவான செயல்திறனுக்காக MediaTek Dimensity 7050 புரொசஸர் கொண்டு இயங்குகிறது. அதேசமயம், ரேம்தான் போதவில்லையென்றால், கூடுதலாக 8ஜிபி வரை virtual RAM விரிவாக்க வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
மொபைலில் 5000mAh பேட்டரி உள்ளது. 67W SUPERVOOC வேக சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 50% பேட்டரியை 20 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும்.
இந்த போனில் தண்ணீர் உட்பட 18 திரவங்கள் பட்டாலும் ஒன்றும் ஆகாது என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. போனை ஹார்டாக பயன்படுத்துவோர் இதனை வாங்கிக்கொண்டு செலவில் இருந்து தப்பிக்கலாம்.
Granite Black, Marble White வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.
மொபைலை ஆர்டர் செய்ய:


OPPO K13 5G – 7000mAh பவர்
புதிய OPPO K13 5G ஸ்மார்ட்போன், பஜட் ரேஞ்சில் கிடைக்கக்கூடிய ஒரு சக்திவாய்ந்த 5G மொபைல். இது 7000mAh பேட்டரியுடன் வருகிறது, எனவே ஒரே சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் வரை போன் உபயோகிக்கலாம்.
பின்புற Camera 64MP, முன்னே 16MP selfie camera. 8GB RAM + 128GB/256GB storage மேலும், virtual RAM extension வசதியும் உள்ளது.

Snapdragon 695 5G processor. 33W fast charging. அதிக நேரம் செல்போன் பயன்படுத்த வேண்டும்; ஆனால், பேட்டரி குறையக்கூடாது என்ற long battery lovers, content viewers, gamers – எல்லோருக்கும் இந்த போன் perfect.
மொபைலை ஆர்டர் செய்ய:


OnePlus Nord CE4
ஓப்போவில் உள்ள சக்திவாய்ந்த Snapdragon 7 Gen 3 புரொசஸர், 8GB ரேம், 256GB ஸ்டோரேஜ், 100W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் – இந்த எல்லாமே OnePlus Nord CE4-ல இருக்கு.

5500mAh பெரிய பேட்டரி, 120Hz AMOLED ஸ்கிரீன், 50MP Sony கேமரா – எல்லாம் சேர்ந்த இந்த போன் சரியான விலையில் பிரீமியம் பீல் தரக்கூடியது. மொபைலின் பில்ட் குவாலிட்டி அருமையாக இருக்கும்.
டிஸ்பிளேவில் தண்ணீர் சிந்தினாலும், இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, தொடர்ந்து உபயோகிக்க முடியும். Oneplusன் வழக்கமான, நல்ல பில்ட் குவாலியிட்டியில் வெளியாகியுள்ளது இந்த போன்.
மொபைலை ஆர்டர் செய்ய:


Samsung Galaxy A55 5G
சம்சங் நிறுவனம் தனது மிட்-ரேஞ்ச் வரிசையில் Galaxy A55 5G மாடலை அறிமுகம் செய்துள்ளது. Awesome Navy and Awesome Iceblue என்ற புதிய நிறங்களில் இந்த போன்கள் கிடைக்கின்றன.
8GB RAM, 128GB RAM மற்றும் 128/256GB மெமரியுடன் விற்பனையாகிறது.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள Exynos 1480 (4nm) புராசஸர், தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற மென்மையான அனுபவத்தை வழங்குகிறது. இதில் Android 14 இயங்குதளம் மற்றும் One UI 6.1 இன்டர்பேஸ் வழங்கப்பட்டுள்ளதுடன், 4 ஆண்டுகள் வரை OS அப்டேட் மற்றும் 5 ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
50MP Camera, 12 மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் உள்ளன. எனவே கேமிரா பிரியர்களுக்கு ஏற்ற போன். 5000mAh திறன் கொண்டது. இது 25W Super Fast Charging வசதியை கொண்டுள்ளது.
Samsung பிராண்டில் ஒரு நல்ல போன் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது குவாலிட்டியான போன் என்று சொல்லலாம்.
மொபைலை ஆர்டர் செய்ய:


Vivo Y400 Pro 5G
வலிமையும் வேகமும் இணைந்த புதிய தலைமுறை ஸ்மார்ட்போன். இந்த மொபைலில் 6.77 அங்குலம் அளவுடைய Full HD+ 3D Curved AMOLED திரை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 5500mAh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான 90W வேக சார்ஜிங் தொழில்நுட்பம், வெறும் 19 நிமிடங்களில் 50% சார்ஜை வழங்கும் திறன் கொண்டது. இது, வழக்கமான பயனாளர்களுக்கும் பயணத்தில் உள்ளவர்களுக்கும் பெரிய ஆதாயமாகும்.

புகைப்படவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பயனாளர்களுக்காக, 50 மெகாபிக்சல் Sony IMX882 பிரதான கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இதில் உள்ளது. 4K வீடியோ பதிவு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் AI Photo Enhance, AI Erase 2.0, AI Note Assist, மற்றும் Circle to Search போன்ற வசதிகள் பயனாளர்களை அதிகம் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு விரும்புபவர்களுக்காக Dual stereo speakers, in-display fingerprint sensor, மற்றும் IP65 தரமான நீர் மற்றும் தூசி எதிர்ப்பு பாதுகாப்பு ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மொபைல் 8GB + 128GB, 8GB + 256 GB மெமரி வசதியுடன் கிடக்கின்றன.
nebula purple, freestyle white, fest go வண்ணங்களில் கிடைக்கிறது.
மொபைலை ஆர்டர் செய்ய:


OnePlus Nord CE5
OnePlus நிறுவனம், தனது Nord தொடரில் புதிய OnePlus Nord CE5* மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பேட்டரி திறன் இதன் பெரிய ஹைலைட். 7100mAh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது சாதாரண பயன்பாட்டிற்கு 2 நாட்களுக்கு மேல் நீடிக்கக்கும். மேலும் 80W அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படம் மற்றும் வீடியோ ஆர்வலர்களுக்காக, 50MP Sony LYT-600 பிரதான கேமராவுடன் OIS வசதி உள்ளது. 8MP wide lense கேமராவும், 16MP முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளன.
Amazon Prime Membershipல் இணைந்து கூடுதல் ஆபர்களை பெற 👇

அன்ட்ராய்டு 15 மற்றும் OxygenOS 15 உடன் கூடிய இந்த மொபைல், 6 ஆண்டுகளுக்கான மென்பொருள் ஆதரவு மற்றும் 4 ஆண்டுகளுக்கான பேட்டரி பாதுகாப்பு வாக்குறுதியோடு வருகிறது.
அதோடு, AI Writer, AI Unblur, AI Perfect Shot போன்ற செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
blackinfinity , marble mist, nexus blue ஆகிய வண்ணங்களில், 8GB+ 128GB, 8GB + 256GB, 12GB + 256GB ஆகிய மெமரி அம்சங்களுடன் இந்த போன் கிடைக்கிறது.
இதனை இந்த லிஸ்டில் பெஸ்ட் போன் என்று கூறும் அளவுக்கு இது ஒரு நல்ல ஸ்மார்ட் போன்.
மொபைலை ஆர்டர் செய்ய:


மேற்குறிப்பிட்டுள்ள ஸ்மார்ட் போன் குறித்து வாசகர்கள் கொடுக்கும் Pros & Cons குறித்து பதிவிட தயாராக உள்ளோம். உங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை newscloudsindia@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.
மொபைல் அம்சங்கள், அதன் விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுத்துள்ள விவரங்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன.