செல்போன்களை கவனமாக பயன்படுத்த வேண்டும்- கோவை போலீஸ் கமிஷனர் அறிவுரை

கோவை: செல்போன்களை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரைக்கும் மதிப்புள்ள செல்போன்களை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளர்.

Advertisement

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருடு போன மற்றும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. 30 லட்சம் மதிப்பிலான 305 செல்போன்கள் கடந்த இரண்டு மாதங்களில் மாநகரப் பகுதியில் இருக்கக்கூடிய பல்வேறு காவல் நிலையங்களில் பதியப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு செல்போன் உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் செல்போன் ஒப்படைக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செல்போன்களை உரிமையாளர்களிடம் கொடுத்தார்.

Advertisement

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநகர காவல் ஆணையர் செல்போன்களை கண்டுபிடிப்பதற்கு காவல் நிலையங்களில் வரக்கூடிய புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரைக்கும் பாதிப்பு உள்ள செல்போன்களை பயன்படுத்தக்கூடிய பொதுமக்கள் தங்களுடைய செல்போன்களை கவனமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group