ஆற்றில் சிக்கி கோவை கற்பகம் கல்லூரி மாணவர்கள் பலி!

கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் ஆற்றில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கற்பகம் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஸ்ரீ கௌதம் மற்றும் அருண். இவர்கள் தங்களது நண்பர்களுடன் இன்று கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சித்தூர் அருகே ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

ஆற்றில் இறங்கி ஸ்ரீ கௌதம், அருண் உட்பட நணபர்கள் குளித்து மகிழ்ந்தனர். அப்போது ஆற்றில் இருந்த துவாரத்தில் சிக்கி அருண் அடித்துச் செல்லப்பட்டார்.

அவர் மாயமானதும், அங்கிருந்த மாணவி ஒருவர், அருண் எங்கே? என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருந்த போதே, ஸ்ரீ கௌதம் அதே பகுதிக்குப் பின்பக்கமாக நீச்சலடித்தபடி சென்றுள்ளார். எதிர்பாராதபடி, அவரும் அந்த துவாரத்தில் சிக்கியுள்ளார்.

ஸ்ரீ கௌதம் மாயமானதைப் பார்த்த மாணவிகள் கூச்சலிட்டனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு, கவுதமை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாயமான அருணை தீயணைப்புத்துறையினர் தேடி வருந்த நிலையில், அவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுற்றுலா சென்ற இடத்தில், நண்பர்களின் கண் முன்னேயே மாணவர்கள் இருவர் ஆற்று நீரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்லும் மாணவர்களே, இளைஞர்களே பாதுகாப்பு விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்

கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Recent News

Video

Join WhatsApp