கோவை: சுந்தராபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சுந்தராபுரம் அருகே உள்ள ஈச்சனாரி ஐயப்பன் நகரை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (வயது 32), என்பவர் வீட்டை பூட்டி விட்டு கிருஷ்ணகிரியில் உள்ள மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார்.
அப்போது அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர்.
மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த ஹரி கிருஷ்ணன் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சுந்தராபுரம் காவல் நிலையத்தில் ஹரிகிருஷ்ணன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹரிகிருஷ்ணன் வீட்டில் திருடி சென்ற மர்ம நபரைத் தேடி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
பி.என். புதூர், நேதாஜி தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 64). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
கடந்த 19ஆம் தேதி முருகேசன் மளிகை கடையை பூட்டிவிட்டு சொந்த ஊரான தூத்துக்குடிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார்.
மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அவரது கடையின் கூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் உள்ளே பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை.
கொள்ளை அடிக்க வந்த திருடன் பூட்டை உடைத்து உள்ளே திருட சென்றபோது ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் திருட முடியாமல் சென்றிருக்கலாம். என கூறப்படுகிறது.
இதுகுறித்து முருகேசன் ஆர் .எஸ். புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடைக்குள் புகுந்த திருடன் யார் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.