கோவை: கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட : ஆட்சியர் அறித்துள்ளார்.
மக்களுக்கான நலத் திட்டங்கள், சேவைகளை நேரடியாக வழங்கும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம்கள் கோவை மாவட்டத்தில் நாளை (23.08.2025) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் அறிவித்துள்ளார்.
அதன்படி, வடக்கு மண்டலம் 1வது வார்டுக்கு, துடியலூரில் உள்ள கமலேஷ் கல்யாண மண்டபத்தில்,
கூடலூர் நகராட்சியின் 15,16,17ஆம் வார்டுகளுக்கு பாலாஜி நகர் பூங்காவில் முகாம் நடைபெறும்.
சூலூர் பேரூராட்சியின் 1 முதல் 9ஆம் வார்டுகளுக்கு ஆர்.வி.எஸ். மருதம்மாள் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறவுள்ளது.
மேலும், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தின் ஆர்.பொன்னபுரம், சிக்கராயபுரம் ஊராட்சிகளுக்கு குள்ளிச்செட்டிபாளையத்தில் உள்ள முத்து மாரப்பா கவுண்டர் திருமண மண்டபத்தில்,
சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கம்மாலப்பட்டி, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிபுதூர் ஊராட்சிகளுக்கு செஞ்சேரிபுதூரில் உள்ள சஞ்சீவ் மஹாலில், சீரப்பாளையம் புறநகரில் உள்ள சீரப்பாளையம், போடிபாளையம் பகுதிகளுக்கு எம்.வி.எஸ். மஹாலில் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் நடைபெறும்.
இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு, அரசு நலத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.