Header Top Ad
Header Top Ad

சரவணம்பட்டி அருகே வீட்டுக்குள் இருந்த பாம்பை பிடித்த வாலிபர் பரிதாப பலி!

கோவை: சரவணம்பட்டி அருகே வீட்டுக்குள் நுழைந்த பாம்பை பிடித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சரவணம்பட்டி அருகே உள்ள அஞ்சுகம் நகர் பகுதியில் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கார்த்தி (வயது 38). இவருக்கு திருமணம் ஆகி மனைவி நித்தியா என்ற மனைவி உள்ளார்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கார்த்தி, அவரது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை கார்த்தியின் உறவினர் ராஜா என்பவர் வீட்டில் பாம்பு புகுந்து விட்டதாக தகவல் கிடைத்தது. அதை பிடிப்பதற்காக கார்த்தி அங்கு சென்றார்.

வீட்டிற்குள் மறைந்து இருந்த பாம்பை கார்த்தி லாவகமாக பிடித்தார். பிறகு அந்த பாம்பை ஒரு பிளாஸ்டிக் பைகள் போட்டு வெளியே கொண்டு சென்று விடுவதற்காக எடுத்துச் சென்றார்.

அங்கு வெளியில் சென்றதும் பிளாஸ்டிக் பைகள் இருந்த பாம்பை அருகில் இருந்த குப்பை மேட்டில் விடுவதற்காக முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு கார்த்திக்கின் இடது கைவிரலில் கடித்தது.

இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement

ஆனால் சிகிச்சை பலனில்லாமல் நேற்று இரவு கார்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி நித்யா சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Recent News