சமோசா வாங்கித்தராத கணவனை புரட்டியெடுத்த மனைவி!

சமோசா வாங்கித்தர மறந்த கணவனை தனது உறவினர்களுடன் சேர்ந்து மனைவி ஒருவர் புரட்டியெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆனந்த்பூரைச் சேர்ந்தவர் சிவம் குமார். தனது மனைவி சங்கீதாவுடன் வசித்து வருகிறார்.

Advertisement

சங்கீதா, தனது கணவரிடம் சமோசா கொண்டு வரச் சொல்லியுள்ளார். ஆனால், சிவம் அதை மறந்தபடி வீடு திரும்பினார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மறுநாள் சங்கீதா தனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை அழைத்துவந்தார். ஆரம்பத்தில் பிரச்சினை சமாதானமாக தீரும் எனத்தோன்றிய நிலையில், சூழ்நிலை திடீரென மோசமடைந்தது.

Advertisement

சங்கீதா, தனது தாய் உஷா, தந்தை ராம்லடைட், மாமா ராமோத்தார் ஆகியோருடன் இணைந்து சிவம் குமாரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

படுகாயங்களுடன் சிவம்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிவம் குமாரின் தாய் விஜயகுமாரி புகார் அளித்ததையடுத்து, போலீசார் சங்கீதா, அவரது பெற்றோர் மற்றும் மாமாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...