கோவை: கோவையில் இலவச மின் இணைப்பு வசதி கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசின் 2024-25 நிதியாண்டில், விவசாயிகளுக்காக அரசு வழங்க வேண்டும் என்று கூறிய 50,000 இலவச மின் இணைப்புகளில் தற்போது வரை 15,000 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில்,
தமிழக “பட்ஜெட்டில் 50,000 இலவச மின் இணைப்புகள் தருவோம் என்று அரசு அறிவித்தது. ஆனால் மின்வாரியம் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வழங்கிய பதிலில் குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது.
1.75 லட்சம் விவசாயிகள் இலவச மின் இணைப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். மின்சாரம் இல்லாததால், பயிர் இட முடிவது இல்லை.
மழைக்காலத்திலும் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது” என்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறும்போது, “அரசின் கொள்கையின் அடிப்படையில் தான் மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. ‘சாதாரண’ மற்றும் ‘தட்கல்’ என இரண்டு வகைகளில் திட்டம் செயல்படுகிறது. நாங்கள் தனிப்பட்ட முறையில் இணைப்பு தர முடியாது,” என்றார்.