கோவையில் சந்தேகத்தால் மனைவியை சரமாரி குத்திவிட்டு தப்பிய கணவன்!

கோவை: கோவையில் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை சரமாரியாக கத்தியால் குத்து தப்பி சென்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கவுண்டம்பாளையம் சங்கனூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் லங்கேஷ்வரி (30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவரது கணவர் கோபிநாத் (35). டிரைவர்.

இவர் வேலைக்கு சென்றால் 15 நாட்கள் கழித்து வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் கோபிநாத் அவரது மனைவி லங்கேஷ்வரியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதற்கிடையே கோபிநாத் வழக்கம் போல வேலைக்கு சென்றார். பின்னர் 15 நாட்கள் கழித்து வீடு திரும்பினார்.

Advertisement

அப்போது கோபிநாத் மீண்டும் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அது தகராறாக மாறி உள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லங்கேஷ்வரியை சரமாரியாக கை, கழுத்து, முதுகு என சரமாரியாக குத்தினார்.

வலியால் அலறி துடித்த அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து கோபிநாத், லங்கேஷ்வரியை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றார்.

பின்னர் அங்கு வந்தவர்கள் லங்கேஷ்வரியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுகுறித்து லங்கேஷ்வரி கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கோபிநாத்தை தேடி வருகின்றனர்.

Recent News

கோவையில் இன்று மின்தடை

கோவை: கோவையில் இன்று மின்தடை ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள் பின்வருமாறு: மதுக்கரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கே.ஜி.சாவடி, பாலத்துறை, சாவடி புதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர்.நகர், சுகுணாபுரம், பி.கே.புதூர், மதுக்கரை, அறிவொளி நகர், கோவைப்புதூர்...

Video

தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை- அலறி அடித்து ஓடிய மக்கள்- சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவை தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானையை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம்,...
Join WhatsApp