கோவை: கோவை மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் சமுதாய வளப் பயிற்றுநர்கள் வேலைவாய்ப்பு-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்கள் அமைப்புகளின் திறன் மேம்பாடு தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்திடும் வகையில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் (CMTC) என்ற துணை அமைப்பு மாவட்ட அளவில் செயல்படும் உயர்நிலை கூட்டமைப்பான மக்கள் கற்றல் மையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வமைப்பு சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்குத் தேவையான திறன் வளர்ப்பு நிதி உள்ளாக்கம் வாழ்வாதாரம் நிறுவனங்களை வலுப்படுத்துததல் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற சேவைகளை வழங்கிடும் ஒரு உயர்நிலை மக்கள் அமைப்பாகும்.
மேற்கண்ட சேவைகளை வழங்கிட கீழ்க்கண்ட தகுதிகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளை சார்ந்த சிறப்பாக செயல்படும்/ செயல்பாட்டில் உள்ள:
- 5 வருட அனுபவம் வாய்ந்த சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்
- ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்கள்
- கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள்
- சமுதாய வளப் பயிற்றுநர்கள்
- சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்கள்
- சமுதாய வளப் பயிற்றுநர்கள்
- விவசாயம், சமுதாய வளப்பயிற்றுநர்கள்
- விவசாயம் சாரா தொழில்கள் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள்
- தொழில் சார் சமுதாய வளப் பயிற்றுநர்கள்
- வட்டார வளப் பயிற்றுநர்கள்
- சமுதாய வளப் பயிற்றுநர்கள் வாழ்வாதாரம்
- ஒத்த தொழில் குழுக்கள் (CLG) உறுப்பினர்கள்
- உற்பத்தியாளர்கள் குழு (PG)
உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்து பயிற்சி நடத்துவதற்குத் தேவையான உடற்தகுதி மற்றும் திறன் இருந்தால் மட்டும் போதுமானது.
இவ்விண்ணப்பதாரர்கள் மாவட்ட வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.
மேலும் கைபேசி செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராகவும் சமுதாய வளப் பயிற்றுநராக செயல்படுவதற்கு குடும்ப ஒத்துழைப்பும் அவசியம்.
அரசியலில் முக்கிய பொறுப்பில் இல்லாதவராகவும் தனியார் நிறுவனங்களில் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ பணிபுரிபவராகவோ இருக்கக்கூடாது.
சமுதாய வளப் பயிற்றுநராக விண்ணப்பிக்கும் போது சார்ந்த சுய உதவிக்குழு வாராக்கடன் நிலை இல்லாது இருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பதாரர் தொடர்புடைய குழுவிலிருந்து சமுதாய வளப்பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி அத்தீர்மான நகலை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
கோவை செய்திகளுக்கு வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர்
சமுதாய வளப் பயிற்றுநர்களாகத் தேர்வு செய்யப்பட்டோருக்கு தர மதிப்பீட்டின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு மதிப்பூதியமாக ரூ.750/- ரூ.500/- மற்றும் ரூ.350/- வழங்கப்படும்.
தொடர்பான விண்ணப்ப படிவம் மற்றும் தகுதிகள் போன்றவற்றை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்திலோ அல்லது
https://drive. google.com/file/d/ 1iQl7GMP0J_njSArPeJJJIHdnOhLpaPv/view?usp=drive_link
என்ற இணைப்பில் பதிவிறக்கம் செய்து 18.11.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் ஒப்படைப்பு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த வேலைவாய்ப்பு செய்தியை தகுதியுடய உங்கள் நட்பு வட்டத்திற்கு பகிருங்கள்.