கோவை: தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கோவையில் மாணவர்களுக்கான வேங்கார்ட் அகடாமி திறப்பு விழாவில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,டெட் தேர்வின் ரிவ்யூ பெட்டிஷனில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்றார்.
இது குறித்து யாரும் கவலைபட வேண்டாம் என்றும் தமிழகத்தில் உள்ள ஆசியர்களாகிய உங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எனவே யாரும் பயப்பட வேண்டாம் என்றார்.
பகுதி நேர ஆசிரியர்கள் குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.பகுதி நேர ஆசிரியர்கள் முழுமையாக தங்களது பணியை செய்தவர்கள்.அவர்கள் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அதன்படி அவர்களை உள்ளே வேகமாக எடுக்க கூடிய முயற்சியை மேற்கொள்வாதோடு பகுதி நேர ஆசிரியர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக இருக்கும் .
ஒட்டுமொத்த தமிழகத்தில் அன்பு கரங்கள் மூலம் 6500 பேர் பயனடைந்து வருகின்றனர் என்றும் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு 18 வயது வரை மாதம் தோறும் 2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகின்றது.படிப்பு இது ஒரு தடையாக இருந்துவிட கூடாது என்பதற்காக அந்த அந்த மாவட்ட ஆட்சியர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது.அதே போல் கல்லூரி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை அரசாங்கம் பார்த்து கொள்ளும் என தெரிவித்தார்.