கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் செவிலியர் மாணவர்கள் சந்திப்பில் பேராசியரிடம் ஆசி பெற்று நெகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் 40 ஆண்டுகளுக்கு முன் பயின்ற செவிலியர் பிரிவு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. கோவை அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த 1982 – 1985 -ம் ஆண்டுகளில் “டிப்ளமோ இன் நர்சிங்” துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டது.

இதில் 30 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும், ஓய்வு பெற்ற செவிலியர் துறை இணை இயக்குநருமான அலமேலு கலந்து கொண்டார். அவரை கண்டதும் முன்னாள் மாணவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று பழைய நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ந்தனர்.
மேலும் அவருக்கு ராஜா ரவி வர்மாவின் ஓவியத்தை பரிசாக முன்னாள் மாணவர்கள் வழங்கி கவுரவித்தனர். இந்த நிகழ்வில் அவர்கள் படிக்கும் பொழுது எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தை பார்த்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.
மேலும் முன்னாள் பேராசிரியர் அலமேலு அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கும் பொழுது மேடமை தற்போது பார்த்தாலும் பயமாக தான் உள்ளது என கூறி பயத்துடன் கூடிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.




