கோவையில் நடைபெற உள்ள உண்மையை மறைக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்- முற்போக்கு இயக்கங்கள் மனு…

கோவை: சிந்து வெளி நாகரிகம் என்பதை மறைத்து சிந்து சரஸ்வதி நாகரிகம் என்ற பெயரில் தனியார் கல்லூரியில் நடத்தப்பட உள்ள கருத்தரங்கிற்கு தடை விதிக்க வேண்டும் என முற்போக்கு இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் தனியார் கல்லூரியில் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு தேதிகளில் சிந்து சரஸ்வதி நாகரிகம் என்ற தலைப்பில் வரலாற்று கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Advertisement

இந்நிலையில் சிந்து சமவெளி நாகரிகம் என்பதை மறைத்து சிந்து சரஸ்வதி நாகரிகம் என்ற பெயரில் தென்னிந்திய ஆய்வு மையம் மற்றும் அந்த தனியார் கல்லூரி நடத்துவதாகவும் இது உண்மையை மறைக்கும் செயல் என்றும் குற்றம் சாட்டியுள்ள முற்போக்கு இயக்கங்கள் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். உடனடியாக கல்வித்துறை மாவட்ட நிர்வாகம் ஆகியவை இதில் தலையிட்டு அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் சிந்து வெளி நாகரிகமே முதன்மையானது, அது கண்டறிந்து நூற்றாண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதனை கண்டுபிடித்த ஜான் மார்க்சல் தொல்லியல் ஆய்வாளருக்கு முதல்வர் சார்பில் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில் உண்மையை மறைக்கும் நோக்காக அந்த கருத்தரங்கு நடத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் கல்லூரியில் இல்லாத ஒரு தலைப்பில் அந்த நிகழ்ச்சி நடைபெறுவதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் கல்வித்துறை அதிகாரிகள் இதில் தலையிட்ட அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் வருகின்ற 11ஆம் தேதி அந்த கல்லூரியை அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் முற்றுகையிட உள்ளதாக தெரிவித்தார்.

Recent News

Video

Join WhatsApp