கூட்டணியில் மாற்றம்?- ட்விஸ்டை பொறுத்திருந்து பார்க்கலாம்- கோவையில் அண்ணாமலை பேட்டி…

கோவை: கூட்டணியில் மாற்றம் வர வாய்ப்புள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை காளப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் விளாத்திகுளம் 17 வயது சிறுமி விவகாரம் காவல் துறையின் தோல்வி, முதல்வரின் தோல்வி என தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு முதல்வர் தான் பொறுப்பு, ஒரு ஆட்சியாளராக தோற்று இருப்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பெட்ரோல், கேஸ் விவகாரத்தில்
இங்கே இருக்கும் அரசியல்வாதிகள் தான் பீதியை கிளப்புகிறார்கள், இங்கு
எந்த பிரச்சினையும் இல்லை என மத்திய அரசு சொல்லி இருக்கிறது எனவும்,
ஹார்மூஸ் பகுதியை கடந்து இரு கப்பல்கள் வந்து இருக்கின்றது என தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர் தேவையில்லாமல் இடையூறு ஏற்படுத்துகின்றனர். வசந்த் அன் கோ வில் இன்டக்ஸ்சன் ஸ்டவ் விற்க வேண்டும் என்பதற்காக , சிலிண்டர் தட்டுப்பாடு என காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மக்களவையில் பேசி கொண்டு இருக்கின்றார் என விமர்சித்தார்.

தமிழக வெற்றி கழகத்தை பொறுத்த வரை அவர்கள் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை அவர்களிடம் தான் கேட்றிய வேண்டும், இன்று புதியதாக எந்த தகவலும் இல்லை என தெரிவித்தார். தமிழக
தேர்தல் களம் சூடு பிடித்து இருக்கின்றது ,
எங்கள் கூட்டணி பலமாக இருக்கின்றது என தெரிவித்த அவர், யாரையும் எதிர் பார்த்து இல்லை என்றார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கூடுதல் கட்சிக்கு சீட் கொடுக்கும் போது , எங்களுக்கு ஏன் கொடுக்க வில்லை என சிபிஎம் கட்சியினர் கேட்கின்றனர் வைகோ இன்று 3 சீட் உதய சூரியன் சின்னத்தில் நிற்கிறோம் என பேசுகின்றார், 3 சீட்டுகளுடன் இருந்த கொ.ம.தே.க இப்போது இரண்டு சீட்டாக குறைத்து இருக்கின்றது , திருமாவளவன் இவர்கள் கொடுக்கும் சீட்டுகளை ஏற்க மாட்டார், தங்களுடன் பயணித்தவர்களுக்கு சீட் குறைக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

கூட்டணியில் மாற்றம் வர வாய்ப்பு இருக்கின்றது என தெரிவித்த அவர், தேர்தலுக்கு முன்பு ஏதாவது ஒரு டிவிஸ்ட் வரும், இந்த முறை என்ன டிவிஸ்ட் இருக்கு என பார்க்கலாம் என தெரிவித்தார். சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டது தமிழக வெற்றி கழகம் தான் அவர்கள் கேட்டதால் சப்போர்ட் செய்தோம் என தெரிவித்தார். ஜனநாயகன் படம் பற்றி விஜயே பேச வில்லை, முதலில் அவர் பேசினால் அப்புறம் பேசுகின்றேன் என்றார்.

முதலமைச்சர் தேவா,ஜீவா என இரு குழந்தைகளை வர வழைத்து பேசி இருக்கின்றார் எனவும், அரசு பள்ளியில் கஞ்சாவை கட்டுப்படுத்தினால் போதும் மற்றவை சரியாகிவிடும். மற்ற மாநிலங்களில் 16 வயது வரை சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தி இருக்கின்றனர் என தெரிவித்த அவர், இங்கு முதல்வர் ஸ்டாலின் படிக்கும் குழந்தைகளை அழைத்து ரீல் போட வைத்து , அவர்களிடம் பேசி இருக்கின்றார் எனவும், முதல்வரின் கவனம் தமிழகத்தின் மீது இல்லை,
ரீல்ஸ் போடும் முதல்வராக இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

கரூர் விவகாரத்திற்கு செந்தில்பாலாஜியை கண்டிப்பாக சிபிஐ விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்றார். பாஜகவின் உண்மையான தொண்டன், அதிமுகவை 2024 தேர்தலில் விமர்சித்து உண்மை தான் என தெரிவித்த அவர், இப்போது கூட்டணியில் இருப்பதால் ஒரு தொண்டனாக ஏற்றுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியும என் மீது விமர்சனம் வைத்து உள்ளார், அரசியலில் பின்னாடி பார்த்தால் அரசியல செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.

தேர்தலில் கட்சி என்ன சொல்கின்றதோ அதை செய்வோம் எனவும், சீட் கொடுங்க என எப்போதும் யாரிடமும் கேட்டதில்லை எனவும், நானாக போய் கேட்கும் நிலையிலும் இல்லை என கூறினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: கோவையில் ஓட்டல் உணவுகளின் விலை உயர்வு… உரிமையாளர்கள் கவலை

கோவையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் செலவு உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவு விலை உயர்ந்ததால், உரிமையாளர்கள் கடும் கவலையில் உள்ளனர்.

Video

கோவை குறித்த ஆவணப்படம் வெளியீடு…

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம், மற்றும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ்.ஆர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள்...