மகளிர் உரிமைத் தொகையில் சந்தோஷப்பட ஒன்றும் இல்லை- கோவையில் அண்ணாமலை பேச்சு…

கோவை: மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதில் சந்தோஷப்பட ஒன்றுமில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாஜக சார்பில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தூத்துக்குடி அடுத்த விளாத்திகுளத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்த சிறுமி கழிப்பறை இல்லாததால் வயல் காட்டிற்கு சென்ற நிலையில் மாலை 6.30 மணிக்கு சென்று இரவு 9 மணி வரை காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க செல்லும் போது புகாரை எடுக்காமல் அலைக்கழித்த நிலையில் மறுநாள் பிற்பகலில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் இந்த ஒரு சம்பவமே திமுக ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என்பதற்கு ஒரு சான்று என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் யாருக்குமே எங்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அனைவருக்குமே உயிர் பயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அவர் கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது குழந்தை திமுக பிரமுகரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மறைந்த முதலமைச்சர் அம்மா ஆட்சியில் இருக்கும் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் யாராவது ஈடுபட்டால் அவர்கள் வெளியே இருக்க முடியுமா என்றும் ஆனால் இன்று திமுக ஆட்சியில் ஒரு பெண் குழந்தையாக இருந்தாலும் தாய்மார்களாக இருந்தாலும் 75 வயது மூதாட்டியாக இருந்தாலும் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் விமர்சித்தார்.

Advertisement

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக சட்டமன்ற உறுப்பினராக ஏழை மக்களோடு சேர்ந்து பழகிய ஒரு அனுபவம் மிக்கவர் என்றும் விவசாயக் குடும்பத்தில் பிறந்து ஒரு மிகப்பெரிய கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அனுபவம் உள்ளவர் என்றும் அரசியலில் உயர் பொறுப்புக்கும் அதிகாரத்திற்கும் வருபவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் கூறியவர் நம்மைப் பார்த்த உடனே இந்த பிரச்சனைக்கு தான் வந்திருக்கிறோம் என்று ஒரு தலைவருக்கு தெரிய வேண்டும் அப்படிப்பட்ட ஒரு தலைவராக நம்முடன் அவர் இருக்கிறார் என்றும் பெருமிதம் கொண்டார்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்த முறை வச்ச குறி தப்பாது என்று திமுகவினர் போஸ்டர் ஒட்டி இருப்பதாகவும் மூன்று முறை தோற்று விட்டு மீண்டும் அதே குறிய இந்த முறையும் வைத்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுகவினர் தோற்கப் போகிறார்கள் திமுகவை பொருத்தவரை தாய்மார்கள் வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் போட்டு விட்டதால் தாய்மார்கள் சந்தோஷமாக இருப்பதைப் போல கூறுகிறார்கள் ஆனால் எந்த தாய்மார்களும் சந்தோஷமாக இல்லை அவர்களுக்கு வரவேண்டிய பணம் வங்கிக் கணக்கிற்கு வந்திருக்கிறது அவ்வளவுதான் ஆனால் இதில் சந்தோஷப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றார்.

Advertisement

வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு செலுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்து முதல் 28 மாதங்களுக்கு அதனை கொடுக்காமல் அடுத்த 32 மாதத்திற்கு 32 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள் பொங்கலுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தார்கள் என்றும் மொத்தம் 37 ஆயிரம் ரூபாய் கொடுத்ததில் ஒரு நாளைக்கு 20 ரூபாய் மட்டுமே கணக்கில் கொடுத்திருக்கிறார்கள் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 30 லட்சம் தாய்மார்களுக்கும் மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கை உள்ளதாகவும் 5 ஆண்டுகளாக மின் கட்டணம் சொத்து வரி என அனைத்து கட்டணமும் உயர்ந்துள்ள நிலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆட்சிக்கு வந்த முதல் நாள் பத்தாயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வந்து விடும் என்றும் கூறினார்.

100 நாள் வேலை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 125 நாட்களாக உயர்த்தி உள்ளதாகவும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அது 150 நாளாக உயர்த்தப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள நிலையில் வாக்குறுதியாக இருந்தாலும் மக்களுக்கு செய்யக்கூடிய பணியாக இருந்தாலும் மக்களை பார்த்துக் கொள்ளும் விதமாக எல்லாவற்றையும் அரவணைத்து செல்ல வேண்டும் என நினைப்பதாகவும் நாம் எல்லோரும் ஒரே குடும்பம் ஆனால் திமுகவிற்கு சபரீசன் குடும்பம் மற்றும் உதயநிதி குடும்பம் மட்டுமே தவிர வேறு யாரும் குடும்பம் கிடையாது என்றும் என்ன மாதிரியான அபாண்டமான குற்றச்சாட்டு கூறினாலும் நாம் அனைவரும் ஒரே அணி அது தேசிய ஜனநாயக கூட்டணி அணி மட்டுமே என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.

கோவை வடவள்ளி பகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட சுகாதார நிலைய கட்டிடத்தை திமுக நிர்வாகி தனது வீடாக உபயோகித்து வந்ததாகவும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது திமுகவினர் அடித்து பிடுங்கிய நிலங்களை மீண்டும் மீட்பதற்காக தனி இலாகாவை போட்டது போன்று மீண்டும் ஒரு நிலை வந்து விட்டதாகவும் சுட்டிக்காட்டினர். அதிமுக ஆட்சியில் இந்தியாவில் எங்குமே இல்லாத வகையில் மத்திய அரசு உதவியுடன் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் ஏழைகளுக்கு கொடுக்கக்கூடிய வீட்டு வசதி திட்டத்தை திமுக முடக்கி இருக்கிறது என்று பிரதமரே குற்றம் சாட்டி உள்ளார் என்றும் மத்திய அரசின் எல்லா திட்டங்களும் மாநில அரசு மூலம் தங்கு தடை இன்றி மக்களுக்கு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஒரு நாளைக்கு ஒவ்வொருவர் மீதும் 150 ரூபாய் கடன் உயர்ந்து வருவது தான் திராவிட மாடல் அரசு ஒரு நாளைக்கு 20 ரூபாயை கொடுத்துவிட்டு 130 ரூபாய் கடனை ஏற்றி விடுவதாகவும் நான் கூறிய கணக்கு தவறு என்றால் மேடை போட்டு மன்னிப்பு கேட்கிறேன் என்றும் சவால் விடுத்தார்.

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு மகளிருக்கும் 2,100 ரூபாயை வழங்கியதாகவும் அதே போன்று எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் முதலமைச்சராக வரும்பொழுது ஒவ்வொரு மகளிருக்கும் 2000 ரூபாய் கொடுப்போம் என்றும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் மாதமே அந்த 2000 ரூபாய் வரும் திமுக ஆட்சியைப் போன்று 29 வது மாதம் கொடுக்க மாட்டோம் என்றும் சுட்டி காட்டினார்.

கோவையில் தற்போது உள்ள ஜிடி நாயுடு மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டியது அதிமுக அரசாங்கம் என்றும் ஆனால் முதலமைச்சர் எல்லா தொகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு சாம்பிராணி போடுவதை போன்று போட்டுக் கொண்டிருப்பதாகவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் 88 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் 20,080 பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள் குறிப்பாக 18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட குற்றச்சம்பவங்கள் 39,900 எனவும் 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு எதிராக சராசரியாக ஒரு நாளைக்கு 22 பேர் என்ற அடிப்படையில் குற்றங்கள் நடந்திருக்கிறது என்றால் என்ன மண்ணாங்கட்டி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது இதை நான் சொல்லவில்லை உள்துறை செயலாளர் நடத்திய பத்திரிகை பேட்டியில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

எனவே எந்த காலத்திலும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோவையில் பத்துக்கு பத்து என்ற அடிப்படையில் அதிமுக வெற்றி பெற்றதால் கொரோனா தடுப்பூசி கோவைக்கு குறைக்கப்பட்டு விட்டதாகவும் இதன் பிறகு 2021 ஆம் ஆண்டு மே, ஜூன், ஜூலை என அடுத்தடுத்து அதிமுக பாஜக தாமாக உள்ளிட்ட கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து முதலமைச்சர் கோவையில் வந்து ஒரு சந்திப்பை நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல் நெல்லை எங்கள் எல்லை குமரி எங்கள் தொல்லை என்று அன்று திமுக கூறியதால் இன்றுவரை குமரியில் திமுக இல்லை என்றும் அதேபோல் இன்று தயாநிதி மாறன் கோயம்புத்தூர் காரர்கள் குசும்புக்காரர்கள் அவர்கள் மற்றவர்களை வாழ வைக்க மாட்டார்கள் என்று கூறிய போது அதனை ரசித்து கைதட்டி சிரித்தவர் பத்து ரூபாய் பாலாஜி ம ஆனால் கோவை மக்கள் தாங்கள் நன்றாக இருப்பார்கள் அடுத்தவர்களுக்கும் ஒரு வாய்ப்பை கொடுத்து வாழ வைப்பார்கள் என்றும் கூறிய அண்ணாமலை, கடந்த முறை கோவையில் பத்துக்கு பத்து ஆனால் இந்த முறை அந்த பத்துக்கு பத்துடன் தமிழகத்திலும் நமது ஆட்சி மலரும் என்றும் வரலாறு காணாத வெற்றியை தொண்டாமுத்தூர் மக்கள் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...