கோவை: ஹஜ் யாத்திரை செல்வோர்க்கு தமிழக அரசு சார்பில் தடுப்பூசி முகாம் துவங்கியது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கோயம்புத்தூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் 02.02.2026 முதல் 07.02.2026 வரை நடத்தப்படுகிறது.
காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் என அறிவித்து அதன்படி இன்று முதல் தடுப்பூசி முகாம் கோவையில் துவங்கியது. கோவை அரசு மருத்துவமனையில் இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
இம்முகாமில், சர்க்கரைஅளவு பரிசோதனை, கல்லீரல் செயல்திறன் பரிசோதனை, (LFT)சிறுநீரக செயல்திறன் பரிசோதனை (KFT) மார்பக X-Ray மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் Meningococcal, and Seasonal Influenza Vaccine ஆகிய தடுப்பூசி மருந்துகளும் செலுத்தப்படவுள்ளது. மேலும், 65 வயதுக்கு மேற்பட்ட 37நபர்களுக்கு மட்டும் Seasonal Influenza Vaccine பிரத்யேகமாக செலுத்தப்படும்.
இம்முகாமில் நாளொன்றுக்கு தலா 50 யாத்திரிகர்கள் வீதம் 6 நாட்களுக்கு 300 யாத்திரிகர்கள் பயன்பெறுவர் என கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

