நல்லாம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!

கோவை: நல்லாம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி விநாயகர் சிலை, வெள்ளி விளக்குகளை கொள்ளையடித்த வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

நல்லாம்பாளையம் ஓம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (66). இவர் கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி குடும்பத்துடன் பெங்களூரு சென்றார்.

இந்த நிலையில் 18ம் தேதி ஹரிஹரனின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஹர்ஷவர்தினி என்பவர் ஹரிஹரனுக்கு போன் செய்து வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹரிஹரன் உடனே கோவை திரும்பினார். வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பாரத்த போது பூஜை அறையில் வைக்கப்பட்டு இருந்த 69 கிராம் எடை உள்ள வௌ்ளி விநாயகர் சிலை, 84 கிராம் எடையுள்ள 2 வெள்ளி காமாட்சி விளக்கு ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து ஹரிஹரன் கவுண்டம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா கட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து ஹரிஹரன் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisement

அதில் ஹரிஹரன் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தது காந்திபார்க் பொன்னையராஜபுரத்தை சேர்ந்த கவிக்குமார் (48) மற்றும் கீரணத்தம், குட்டி தோட்டம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (36) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர். அப்போது மாநகரில் பதுங்கி இருந்த கவிக்குமார் மற்றும் ராஜசேகரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமுதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.