கோவை: கோவையில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கியது.
கோவை மாநகர் மணியகாரம்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து சில தினங்கள் ஆகிறது. அதற்காக போடப்பட்ட புதிய சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.
அப்பொழுது அப்பகுதியில் எந்த வாகனமும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக லாரியில் இருந்தவர்கள் சுதாரித்து கீழே இறங்கினர்.
தற்பொழுது போடப்பட்ட புதிய சாலை திடீரென பள்ளம் ஏற்பட்டு லாரி சிக்கிக்கொண்ட சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சம் அடைந்து உள்ளனர்.
மேலும் நீண்ட தூரத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாநகரில் பல்வேறு பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வந்தாலும் பணிகள் முடிந்த பிறகு தரமான சாலைகளை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



