கோவை: அரசு மாணவிகள் தங்கும் விடுதியில் கோவை கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட முழுவதும் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, மக்கள் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்.
அந்த வகையில், கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் மாணவியர் தங்கும் விடுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
இந்த விடுதியில், 162 மாணவிகள் தங்கி, கல்லூரிகளில் பயின்று வரும் நிலையில், அவர்களிடம் ஆட்சியர் கிரியப்பனவர் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகும் நுணுக்கங்களையும் கூறினார்.

தொடர்ந்து ஆட்சியரிடம் மாணவிகள், மதிய உணவில் கீரை, 15 மாணவிகளுக்கு தலா ஒரு கணினி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும், விடுதியில், விளையாட்டு பயிற்சிகள் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதனைக் கேட்ட ஆட்சியர், மாணவிகள் முன்வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார். இதனால் மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர்.