Header Top Ad
Header Top Ad

கோவையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்- ஈபிஎஸ் கூறிய அறிவுரை…

கோவை: கோவையில் மாற்று கட்சியை சேர்ந்த பலர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்…

Advertisement
Lazy Placeholder

கோவை அதிமுக அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.

அவர்கள் மத்தியைல் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, இன்றைய தினம் இதய தெய்வம் மாளிகையில் தேர்தல் சுற்று பயண நிகழ்ச்சியொடு இந்த நிகழ்ச்சியும் நடைபெறுகிறது என்று கூறி புதிதாக சேர்ந்தவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

Advertisement
Lazy Placeholder

ஜனநாயகம் மிக்க கட்சி அதிமுக என்றும் சிறப்பாக செயல்பட கூடியவர்கள்உயர்ந்த இடத்திற்கு வருகின்ற கட்சி அதிமுக என்றார்.
தலைவர் எந்த வழியை பின்பற்றினார்களோ அந்த வழியை நாம் பின்பற்றி வருவதாகவும் எம்ஜிஆர் அம்மா ஜெயலலிதா காணாத சோதனையா அனைத்தையும் நாம் கடந்து வந்துள்ளோம் என்றார். மேலும் அவர்கள் மறைந்தாலும் அவர்களது வார்த்தை நம் மனதில் உள்ளது என்றார்.


எத்தனையோ வழிகளில் நம் இயக்கத்தை உடைக்க பார்த்தார்கள் எந்த கொம்பனாலும் அது முடியாது, சாதாரண தொண்டன் கூட உயர்ந்த இடத்திற்கு வர கூடிய இயக்கம் நம் இயக்கம் என்றார். தலைவர்கள் கண்ட கனவை நாம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


புதிதாக சேர்ந்தவர்கள் நன்கு உழைத்து உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Latest Articles