புலியகுளம் அந்தோணியார் ஆலய தேர் திருவிழா!!!

கோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர் திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்

கோவை புலியகுளத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் பவனி ஆண்டுதோறும் நடைபெறும்.இந்த ஆண்டு ஆடம்பர தேர் திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement

தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று அதற்கு முன்னதாக இன்று காலை முதல் நற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

இதற்கு கோவை மறைவமாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமை தாங்கினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நடைபெற்றது கொட்டும் மழையிலும் கிறிஸ்தவர்கள் தேரை இழுத்து பவனி வந்தனர்.

இந்த தேர் புலியகுளம் சுற்றுவட்டாரப் பகுதியை சுற்றி வந்தடைந்தது. தேர்பவனி முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Recent News

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...

Video