கோவை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு சரிபார்க்கும் கருவிகள் சமவாய்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-னை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் நாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளை (VVPAT) சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான முதற்கட்ட சமவாய்ப்புக்கு உட்படுத்தும் செயல்முறை (First Randomisation) மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பிரிவு அலுவலர் முகமது குதரதுல்லா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தேர்தல் வட்டாட்சியர்தணிகைவேல், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மின்னணுவாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை அமைப்பு மூலமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் (VVPAT) முதல் கட்டமாக சமவாய்ப்புக்குட்படுத்தும் செயல்முறை (First Randomization) மேற்கொள்ளப்பட்டது.
இந்த முதல் சமவாய்ப்புக்குட்படுத்துதும் நடைமுறை முடிந்த பின்னர் தொகுதிவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்களர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் (VVPAT) பட்டியல்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும்.
இந்த மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் சரிபார்க்கும் கருவிகள் தேர்தலில் பயன்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு (RO)/ உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு (ARO) வழங்கப்படும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை
இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் (Strong Room) இருப்பில் வைக்கப்படும். பின்னர் அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

