கோவை: முருகன் மாநட்டில் மதத்தை வைத்து அரசியல் நடத்த இந்துத்துவ சக்திகள் முயற்சிப்பதாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மதிமுக ஜூன் 22 ஈரோட்டில் பொதுக்குழு நடத்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது
அடுத்த தேர்தல் காலம் வரையிலான திட்டங்களை பொதுக்குழுவில் எடுத்து வைக்க இருப்பதாகவும் தெரிவித்த அவர்,
பெஙகளூரில் 11 பேர் உயிரிழந்த்து
மிகவும் வேதனைக்குரியது. முன்கூட்டியே விபரீத மரணங்கள் நிகழகூடும் என உளவு துறை யூகித்து ஏற்பாடு செய்து இருக்க வேண்டும் எனவும்
மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு வீரவணக்கம், இரங்கலை தெரிவித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கன்னட மொழி விவாகரத்தில் கமல் பேசியது குறித்த கேள்விக்கு
உலகில் இருக்கும் மொழியில் வல்லுநர்கள், அறிஞர்கள் மூத்த மொழி தமிழ்மொழிதான் என சொல்லி இருக்கின்றனர்
வட மொழி, கிரேக்கம், லத்தின் , எகிப்து மொழி போன்றவற்றை விட மிக தொன்மையான மொழி தமிழ் மொழி இதனால்தான் நீராடும் கடலொடுத்த பாடலை மனோன்மணியம் சுந்தரனார் இயற்றினார்.
மலையாளம்,கன்னடம் தமிழில் இருந்து உதித்தது என பாடி இருக்கின்றார்
திமுக கூட்டங்ஙகளில் இந்த கருத்துதான் பாடலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது
வடமொழியை விட மூத்த மொழி தமிழ்மொழி
கமல் இந்த கருத்தை பேசியதில் எந்த தவறும் இல்லை. இத்தோடு அவர்கள் நிறுத்தி கொள்வதுதான் நல்லது என வைகோ தெரிவித்தார்.
முருகன் மாநட்டில்
மதத்தை வைத்து அரசியல் நடத்த இந்துத்துவ சக்திகள் முயற்சிப்பதாகவும்,
தமிழகத்தில் ஒலித்த மொழி உணர்வு பிற மாநிலங்களில் கேட்பது நல்லதிருப்பம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அதிமுக ஆட்சியில் ஏராளமான தவறுகள் நடந்தது. மக்கள் பாதிக்கபட்ட அவர்கள் எதுவும் செய்யவில்லை.
எதிர்வரிசையில் இருப்பதால், கற்பனையோடு பேசுகின்றார் எடப்பாடி. அதை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் வைகோ தெரிவித்தார்.
மதிமுக சார்ரபில்
ஏற்கனவே பாராளுமன்றத்தில் ஒலித்த குரல் இன்னும் பதிந்து இருக்கின்றது எனவும்
திமுக மாநிலங்களவை பொறுப்பை கொடுத்தார்கள்.அதற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்த வைகோ,
மதிமுக திமுகவிற்கு வருங்காலங்களில் என்றும் துணை நிற்கும் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்தார்.
தவெக பற்றிய கேள்விக்கு தவெக பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை என மதிமுக பொது செயலாளர் வைகோ பதிலளித்து சென்றார்.