கடல் இல்லைனா என்ன? கோவை அருகே உள்ள சூப்பர் கடற்கரைகள் | Beaches near Coimbatore

Beaches near Coimbatore: கோவை அருகே அமைந்துள்ள அருமையான 5 கடற்கரைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

மாநிலத்தின் 2வது மிகப்பெரிய நகரமாக இருக்கும் கோவையானது, அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால், கோவையன்ஸ்களுக்கு எப்போதும், ஒரே ஒரு குறை தான். அது வேறு ஒன்றுமில்லை, கடல் போன்ற நீர்நிலை இல்லையே என்பது தான்.

Advertisement

மேற்கு மண்டல மாவட்டங்களைத் தவிர்த்து, பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், கடற்கரை அல்லது பீச் எக்ஸ்பீரியன்ஸை சுலபமாக அனுபவிக்க முடியும்.

ஆனால், கோவை மக்களுக்கு அப்படியில்லை. பீச்-க்கு செல்ல வேண்டுமெனில், அண்டை மாநிலமான கேரளாவில் இருக்கும் பீச்கள் தான் மிகவும் அருகாமையில் உள்ளன.

அப்படி என்ன என்ன பீச்கள், எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

கோவைக்கு அருகே உள்ள மிகவும் அழகான பீச்களில் இதுவும் ஒன்றாகும். கோவையிலிருந்து 138 கி.மீ., தொலைவில் திருச்சூரில் அமைந்துள்ளது. சாலை மார்க்கமாக புறப்பட்டால் 2.45 மணிநேரத்தில் சென்றடையலாம். சூரிய அஸ்தமனத்தின் சிறந்த காட்சியைக் கண்டு ரசிக்கலாம்.

Advertisement

இந்த பீச்சும் திருச்சூரில் அமைந்துள்ளது தான். கோவையிலிருந்து 150 கி.மீ., தொலைவில் உள்ளது. பைக், மற்றும் காரில் செல்ல விரும்பினால் 3 மணிநேரத்திற்குள் சென்றுவிடலாம். பொதுவாக இந்த பீச்-க்கு செல்வதை பட்ஜெட் சுற்றுலா என்று அழைக்கிறார்கள். காரணம், போக்குவரத்து செலவைத் தவிர பெரிய அளவிலான செலவுகள் இருப்பதில்லை.உணவுகளும் நியாயமான விலையில் கிடைப்பதால், செலவு குறைவு தான்.

திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய கடற்கரை தான் வதனபள்ளி பீச். கோவையிலிருந்து 130 கி.மீ., தொலைவில் உள்ளது. கடற்கரையில் சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் கண்டு களிக்கலாம்.

கேரளாவில் உள்ள பிரபல பீச்சுகளில் கோழிக்கோடு பீச்சும் ஒன்று. கோவையிலிருந்து 181 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்கு சூரிய அஸ்தமனத்தை ஆரஞ்சு கலரில் காண்பிக்கும் என்பதால், பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாகக் காட்சியாகும். இதைக் காணவே சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

கோவையிலிருந்து 193 கி.மீ., தொலைவில் உள்ளது கப்பாட். பீச். இங்கு தான் வாஸ்கோட காமா முதல்முதலாக வந்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பகுதிக்கு இன்னமும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றனர்.

எங்கே டூர் போகலாமுண்ணு சிந்தனையில் இருக்கும் உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் செய்து சட்டுன்னு ஒரு முடிவு எடுங்க…

Recent News