கோவை: கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சித்ரா பகுதியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் உப்பிலிபாளையத்தில் இருக்கும் பழைய பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இன்று விடுமுறை தினம் என்பதால் அலுவலகத்திற்கு ஊழியர்கள் வரவில்லை மேலும் எதிர்ச்சியாக இ-மெயிலை சோதனை செய்த போது ஊழியர் ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன் அடுத்து பீளமேடு காவல் நிலையம் மற்றும் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் உப்பிலிபாளையத்தில் உள்ள பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் அதிநவீன கருவியுடன் இரண்டு அலுவலகத்திலும் தீவிர சோதனை ஈடுபட்டனர்.
சோதனை பின்பு இது புரளி என்று தெரியவந்துள்ளது அதனைத் தொடர்ந்து இமெயில் யார் அனுப்பியது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோல நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் ஒடுக்கப்பட்ட நிலையில் அங்கும் சோதனை நடத்தப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் மிரட்டல் வந்துள்ளதால் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.