கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த மாதம் 26 மற்றும் 27 ஆகிய இரு தேதிகளில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இ -மெயில் மூலம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு கோவை ரேஸ் கோர்ஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக அங்கு வந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகம் வளாகம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். கலெக்டர் அலுவலக கட்டிடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு தற்பொழுது பரபரப்பு நிலவியது.
ஏற்கனவே கடந்த மாதம் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் இதே போன்று மர்ம நபர்
இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
இதை தொடர்ந்து இ- மெயில் மூலம் கடிதம் அனுப்பிய நபர் யார் ? என சைபர் கிரைம் போலீஸாரும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 நாளில் மூன்றாது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.