கோவை: சமாதானம் பேச அழைத்து சிறுவனை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தேனியை சேர்ந்தவர் ராஜன் (17- பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவை போத்தனூர் கோணவாய்கால்பாளையம் பகுதியில் தங்கி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜனுக்கும், எல்ஜி நகரை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வெள்ளலூர் பெரியார் நகரை சேர்ந்த தவசி (28) பிரவீன் குமார், அருண் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் ராஜனை போனில் அழைத்து போலீசில் புகார் அளித்தது சமந்தமாக நேரில் பேச வேண்டும், சமாதானமாக சென்று விடலாம் என்றுள்ளார்.
தாக்குதல்
இதையடுத்து ராஜன் அவர்கள் வர கூறிய வெள்ளலூர் ரோடு மாகாலிங்கபுரம் பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேரும் ராஜனிடம் பேசிக் கொண்டு இருந்தனர். அதில் திடீரென ஆத்திரம் அடைந்த அவர்கள் ராஜனை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினர்.
பலத்த காயம் அடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து ராஜன் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தவசி மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
மற்ற 2 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமாதானம் பேசி சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



