கோவை: கோவை வாழ் விஸ்வகர்ம சமுதாய மக்கள் ஒன்றிணைந்து, ஶ்ரீ விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஶ்ரீ விஸ்வப்பிரம்ம திருவீதி ஊர்வலம் நடைபெற்றது.
கோவையில் விஸ்வகர்மா சமுதாய மக்கள் ஒன்றிணைந்து ஸ்ரீ விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழாவை நடத்தினர்.
20ஆம் ஆண்டு ஐந்தொழில் விஸ்வகர்மா சமுதாய ஒற்றுமை பெருவிழா சார்பில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மாலை காமாட்சி அம்மன் ஆலயத்தில் தொடங்கி, நகரத்தின் முக்கிய வீதிகளில் ஶ்ரீ விஸ்வப்பிரம்ம திருவீதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் மயிலாட்டம் , ஒயிலாட்டம், வான வேடிக்கை, தப்பாட்டம் ,கேரள செண்டை மேளத்துடன் மக்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.
இந்த விழாவில், தலைவர் எஸ். பலவேசம் ஆச்சாரியார், பொருளாளர் எம்.பாண்டியன் மற்றும் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் தேவஸ்தான நிர்வாகிகள், விஸ்வகர்மா ஜகத்குரு பாபுஜி சுவாமி, ஜெலேந்திரன் ராஜ்மோகன் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்த ஊர்வலத்தை சிறப்பாக நடத்தினர்.