நகை பறிக்க முயன்றவரை மடக்கிப் பிடித்த கோவை சிங்கப்பெண்

கோவை: கோவையில் தன்னிடம் நகை பறிக்க முயன்ற நபருடன் போராடி அவரை போலீசில் பிடித்துக் கொடுத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பீளமேடு அருகே உள்ள ஆவாரம்பாளையம் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவரது மனைவி தீபா (48). இவர் வீட்டு வேலை பார்த்து வருகிறார்.

நேற்று காலை, தீபா ஆவாரம்பாளையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசா நகருக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் வந்தார். திடீரென்று அந்த வாலிபர் தீபாவின் கழுத்தில் கிடந்த தங்க தாலி செயினை பிடித்து இழுத்தார்.

உடனே சுதாகரித்துக் கொண்ட தீபா, செயினை பறிக்க விடாமல் இழுத்துப் பிடித்தார். மேலும், அந்த நபருடன் போராடினார். அதோடு “திருடன் திருடன்” என்று சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.

Advertisement

அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் திரண்டபோது, பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தார். அதன் பின்னர் அந்த வாலிபரை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் தங்க செயினை பறிக்க முயன்றது கேரள மாநிலம் மலப்புறம் பகுதியைச் சேர்ந்த முகமது அமீன் (23) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Recent News

டாஸ்மாக்கை மூடுவது மட்டும் தீர்வல்ல- கோவையில் CITU மாநில தலைவர் பேட்டி

கோவை: சிஐடியு 16-வது மாநில மாநாடு கோவையில் எழுச்சியுடன் தொடங்கியது. கோவை நவ இந்தியா சாலையில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கில் சிஐடியு 16-வது மாநில மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது. நவம்பர் 9-ஆம் தேதி வரை...

Video

தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை- அலறி அடித்து ஓடிய மக்கள்- சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவை தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானையை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம்,...
Join WhatsApp