கோவை: கோவையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தில் முட்புதர்கள் வெட்டி அகற்றப்பட்டன.
பீளமேடு விமான நிலையம் பின்புறம் சிங்காநல்லூர் வரை செல்லும் பாதையில் உள்ளது. அங்கு கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
அந்த பகுதியில் முட்பதர்கள் மற்றும் மண்மேடுகள் அதிகம் இருந்ததால் போலீசார் மாணவியை தேடி கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த பகுதியில் முட்புதர்கள் மற்றும் மண்மேடுகள், குப்பை மேடுகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
போலீசாரம் இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று கோவை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இந்திரன் உதவியுடன் அந்தப் பகுதியில் இருந்த மணல்மேடுகள் மற்றும் முட்பதர்களை வெட்டி அகற்றினர்.


