Header Top Ad
Header Top Ad

கோவை மாநகராட்சியை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்- காரணம் என்ன?

கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்…

கோவை மாநகராட்சி வீட்டு வரி, குப்பை வரி, குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்டுக்கு 6% வரி உயர்வை கைவிட வேண்டும் , அபராத வரியை போட கூடாது,
பாதாள சாக்கடை, சூயஸ், அம்ருத் திட்டங்களுக்கு சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளை சீரமைக்க வேண்டும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

Recent News