கோவை: கோவையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.
ஆனால், எதிர்பார்த்த அளவு மழைப்பொழிவு காணப்படவில்லை. இதனிடையே இன்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மதிய நேரத்தில் மழையை எதிர்பாக்கலாம் என்று வானிலை மையம் கணித்துள்ளது. மாவட்டத்தின் பல இடங்களிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
வானிலை மையம் தரும் அடுத்த அப்டேட்களை நமது இணையத்தில் படியுங்கள்