கோவை: நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வகுப்பறைகள் அனைத்தும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன…
நாளை மறுநாள் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு பள்ளிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

கோவை மாநகராட்சியிலும் பள்ளிகள் அனைத்தும் தூய்மைப்படுத்தும் பணிகள் ஒப்பந்த பணியாளர்களை கொண்டு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. பள்ளியின் வகுப்பறைகள், கழிவறைகள், மைதானங்கள், குழந்தைகள் விளையாடும் இடங்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏதேனும் பள்ளி வராண்டாக்களில் மழை நீர் தேங்கி இருந்தால் அவை அகற்றப்பட்டு வருகிறது. அதேசமயம் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாட புத்தகங்கள் பள்ளி சீருடைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.