கோவையில் விளையாட்டாக செய்த செயலால் சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன்!

கோவை: கோவை ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.

Advertisement

திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்:12696) கடந்த 24ம் தேதி இரவு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.

25ம் தேதி அதிகாலை 2.10 மணி அளவில் இருகூர் – போத்தனூர் இடையே பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் ரயில்வே பாலத்தின் அடியில் ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கல் மீது ரயில் மோதியதில் கல் சுக்கு நூறாக உடைந்து சிதறியது. இது குறித்து லோகோ பைலட் கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர்.

தண்டவாளம் பகுதிக்கு மோப்பநாய் அழைத்து செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் மோர் மார்க்கெட் வரை ஓடி சென்றது. எதையும் அடையாளம் காட்டவில்லை.

Advertisement

போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

அப்போது சிங்காநல்லூரை சேர்ந்த 15 வயது சிறுவன் ரயில்வே தண்டவாளத்தில் கற்களை வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சிறுவனைகைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

ரயில் தண்டவாளம் மற்றும் ரயில் நிலையங்கள் அருகே வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடுங்கள்.

Recent News

கோவை மக்களே எனக்கு பாதுகாப்பு- துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்…

கோவை: கோவைக்கு வருகை புரிந்துள்ள துணை குடியரசுத் தலைவர் கோவை மக்களே எனக்கு பாதுகாப்பு என தெரிவித்துள்ளார்.கோவைக்கு வந்துள்ள துணை குடியரசுத் தலைவர் காலையில் கொடிசியாவில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிறகு டவுன்ஹால் பகுதியில்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...