Header Top Ad
Header Top Ad

திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே கோவை-சென்னை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

கோவை: பயணிகள் கூட்ட நெரிசலை அடுத்து, தெற்கு ரயில்வே சார்பில் கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பண்டிகை, வார இறுதி நாட்களில் அதிக பயணிகள் நெரிசலை ஏற்படும் என்பதைக் கருதி, போத்தனூர் – சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

போத்தனூர் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06028) மே 8ம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும்.

Advertisement

சென்னை சென்ட்ரல்–போத்தனூர் சிறப்பு ரயில் (06027) மே 9ம் தேதி காலை 10.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் மாலை 6 மணிக்கு போத்தனூரை வந்தடையும்.

  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • ஜோலார்பேட்டை
  • கட்டப்பாடி
  • அரக்கோணம்
  • திருவள்ளூர்
  • AC 2 டயர்
  • AC 3 டயர்
  • ஸ்லீப்பர் கிளாஸ்
  • ஜெனரல் சிக்னல் கிளாஸ்

இவ்வாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பயனுள்ள இத்தகவலை ரயில் பயணிகளுக்கு பகிரவும்.

Recent News