கோவை: கோவையில் இன்று முக்கியமான முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
கோவையில் பல்வேறு துறைகளின் கீழ் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாகவும் கோவைக்கு நேரடியாக வருகை புரியும் பொழுதும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து வருகிறார்.
அதன்படி கோவையில் இன்று (13.03.2026) முக்கியமான முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
அதன்படி கோவை மாநகராட்சியில் 13 கோடி ரூபாய் மதிப்பில் நவீனமயமாக்கப்பட்ட உக்கடம் பேருந்து நிலையம் ஒன்றாவது முனையத்தை திறந்து வைக்கிறார்.
கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் அலுவலகத்தையும் கணபதி மாநகர் பகுதியில் முதல்வர் படைப்பகம் அலுவலகத்தையும் திறந்து வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து கோவையில் மேற்கு புறவழிச்சாலை First Phase யையும், மதுக்கரை நகராட்சி அறிவொளி நகர் பகுதியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் நெடுஞ்சாலை துறை சார்பில் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி முதல் ஆட்சி பற்றி வரையிலான வரை சாலையையும் முதல்வர் திறந்து வைக்கிறார்.

