சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் இந்தி மொழி அழிப்பு- போலிசார் விசாரணை…

கோவை: சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் அறிவிப்பு பலகையில் இருந்த இந்தி மொழி கருப்பு மைக் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அண்மைக்காலமாக இந்தி மொழி திணிப்பிற்கு பல்வேறு திராவிட கட்சிகளும் இந்தி திணிப்பு எதிர்ப்பாளர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் விமான நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் ஊரின் பெயர் இந்தி மொழியில் இருப்பதை கண்டித்து அதனை அகற்ற வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் இந்தி மொழிக்கு முக்கியத்துவத்தை மத்திய அரசு தருவதாகவும் தமிழ் மொழியை புறக்கணிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கடந்த சில தினங்களாகவே ரயில் நிலையங்கள் முன்பு திராவிட கட்சியினரும், மே 17 இயக்கத்தை சேர்ந்தவர்களும் இந்தி திணிப்பு எதிர்ப்பாளர்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் ஊர் பெயர் அறிவிப்பு பலகையில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த சிங்காநல்லூர் என்ற வார்த்தை கருப்பு மை கொண்டு மர்ம நபர்களால் இரவு நேரம் அழிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் மூன்று இடங்களில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த சிங்காநல்லூர் என்ற ஊரின் பெயர் அழிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து ரயில்வே போலிசாரும் சிங்காநல்லூர் காவல் நிலைய போலிசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிங்காநல்லூர் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...