Social Media Influencer களுக்கு கோவை ஆட்சியரின் எச்சரிக்கை…

கோவை: Social Media Influencers தேர்தல் சம்பந்தமாக தவறான தகவல்களை பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பவன்குமார், மாநகர காவல் ஆணையாளர் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய அவர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், நேற்று முதலே மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். 27,14, 676 மொத்த வாக்காளர்கள் இருப்பதாக தெரிவித்தார். கோவையில் 3571 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளதாக கூறினார். ECINet மொபைல் செயலி மூலமும் வாக்காளர்கள் அவர்களது முழு விவரங்களை அறியலாம் எனவும் தெரிவித்தார்.

ஆன்லைன் வாயிலாகவே தேர்தல் விதி மீறல்கள் குறித்து புகார் அளிக்கலாம் என்றும் அரசியல் கட்சிகளும் அவர்களுக்கான அனுமதியை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம் என்றார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையமும் இதற்காக இயங்கப்படும் 1800250086 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம் எனக் கூறினார்.

மேலும் கோவை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் webcasting வசதி ஏற்பாடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். 8334 பேலட் யூனிட்கள் இருப்பதாகவும் 5700 control யூனிட் இருப்பதாகவும், 5572 விவிஎம் பேட் இருப்பதாக கூறினார். MCMC மூலமாகவும் மீடியாக்களில் வரும் செய்திகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவித்தார். மேடம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் மாடல் போலிங் ஸ்டேஷன் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

182 பதட்டமான வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர் அங்கு கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக கூறினார். 50,000 ரூபாய் வரை ஆவணம் இன்றி பணத்தை எடுத்துச் செல்லலாம் அதை மீறி எடுத்துச் செல்லும் பட்சத்தில் ஆவணங்கள் இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும் எனவும் பொதுமக்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியை அணுகி ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு பணத்தை பெற்றுச் செல்லலாம் என தெரிவித்தார்.

MCMC என்று மீடியாக்களை கண்காணிக்கும் குழுவில் சோசியல் மீடியாக்களும் கண்காணிக்கப்படும் என்று குறிப்பிட்டார். மலைப்பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளை கண்டறிந்து அங்குள்ளவர்கள் வாக்கு சாவடியை அடைவதற்கு ஏதேனும் சிரமங்கள் இருந்தால் அதனை களைவதற்கான நடவடிக்கைகளும் வனத்துறையுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

சோசியல் மீடியாக்களில் வாக்காளர்களை பாதிக்கும் பதிவுகள் வரும் பொழுது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். MCMC சர்டிபிகேஷன் இல்லாமல் எந்த ஒரு வேட்பாளர்களின் விளம்பரங்கள் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தல் இருப்பதாகவும் அதனை மேலும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த அவர் இது சோசியல் மீடியாக்களுக்கும் பொருந்தும் என்றார். சோசியல் மீடியா இன்ஃப்ளூரியன்சர்கள் தவறான பதிவுகளை போட்டாலோ model code of contact விதிமுறைகளை மீறி பதிவுகளை போட்டாலோ அது குற்றம் என்றும் சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி எடுத்த கோவை மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் தேர்தலுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாநகர காவல் துறை சார்பில் மாநகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் தேர்தல் விதிமுறைகள் குறித்து தகவல்கள் வரம் பட்சத்தில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு செய்தியாளர்களுக்கு கோட்டு எடுத்த காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கோவை மாவட்டத்தில் 13 தமிழக கேரள எல்லை சோதனை சாவடிகள் இருப்பதாகவும் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Fun Republic Mall-ல் அசத்தலாக திறமையை வெளிப்படுத்திய கோவை பெண்கள்! – VIDEO

மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை Fun Republic Mall-ல் நடந்த போட்டிகளில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை அசத்தலாக வெளிப்படுத்தினர்.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.