கோவை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் தேதி அறிவிப்பு

கோவை: கோவை மாநகராட்சியில் வரும் 14ஆம் தேதி மாமன்றக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கோவை மாநகராட்சியில் மாதந்தோறும் மாமன்ற கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

இதேபோல், வருகிற 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சாதாரண மாமன்ற கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டம் காலை 10.30 மணிக்கு துவங்குகிறது.

மேயர் ரங்கநாயகி தலைமை தாங்குகிறார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகிக்க உள்ளார்.
இதில் சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்டவை குறித்த பல தீர்மானங்கள் அனுமதிக்காக முன் வைக்கப்பட உள்ளன.

Recent News

Video

Join WhatsApp