கோவை: டிரைவருக்கு இழப்பீடு கோவையில் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
பீளமேட்டைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (65). அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்த இவர், பணி ஓய்வு பெற்றுள்ளார்.
இவரது பணிக் காலத்தில் விபத்து ஏற்படுத்தியதன் காரணமாக ஜெயக்குமாரின் ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஜெயக்குமார் கோவை தொழிலாளர் கூடுதல் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2023ம் ஆண்டு ஜெயக்குமாருக்கு ரூ.2,42,702 பணத்தை 9 சதவீத வட்டியுடன் வழங்க தொழிலாளர் நல நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இழப்பீட்டு தொகை வழங்காமல் போக்குவரத்துக் கழகம் இழுத்தடித்த் உவந்தது.
இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் மீண்டும் நீதிமன்றத்தை முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி காந்திபுரத்தில் இருந்து ஈஷா யோகா மையம் செல்லும் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.

