கோவை: அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி கோவை தி.மு.க., வினர் அக்கட்சியினர் மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அம்பேத்கரின் 135வது பிறந்தநாளையொட்டி கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் அம்பேத்கரின. திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து கட்சியினர் சமத்துவநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தகுமார், பகுதி கழக செயலாளர்கள் சேதுராமன், பசுபதி, மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.