கோவை மக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ஏற்பாடு…

கோவை: கோவையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாக்காளர்களிடையே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (Electronic Voting Machine) வாக்குப் பதிவுசெய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு முக்கிய அரசு அலுவலகங்கள் கடந்த மின்னணு வாக்குபதிவு (Electronic Voting Machine) செயல்முறை விளக்க மையம் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், கோவை பாரத ஸ்டேட் வங்கி சாலையில் அமைந்துள்ள கோயம்புத்தூர் தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இம்மையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் வாக்கு செலுத்தி எவ்வாறு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படுகிறது என்பதைக் காணலாம்.

மேலும், வாக்காளர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு நடமாடும் வாகனம் வீதம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடமாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்க மைய வாகனங்களும் விழிப்புணர்வு பணியில் ஈடுப்பட்டு வருகின்றன.

எனவே, பொதுமக்கள் இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரம் செயல்முறை விளக்க மையத்தினை பயன்படுத்தி, வாக்களிக்கும் முறை மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து அறிந்து கொள்ளுமாறு கோவை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2026: என்ன செய்யலாம்? என்ன கூடாது?

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.