கோவை: ஜி டி மேம்பாலத்தில் தலை குப்புற கவிந்த காரினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை அவிநாசி சாலை ஜி டி மேம்பாலத்தில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஹோப் காலேஜ் அருகே மேம்பாலத்தில் மேல் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதனால் மேம்பாலத்திற்கு மேல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் மூலம் காரை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதிக வேகத்தில் காரை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதா? வாகனத்தை முந்தும் போதும் விபத்து ஏற்பட்டதா? காரில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

