கோவை தெற்கில் இருந்து ஒரு திருப்பம்: விஜய்க்கு தொண்டர்கள் அழைப்பு!

கோவை: தவெக தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கு போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதன்முறையாக வரும் சட்டமன்றத் தேர்தலில் களம் காண்கிறார். இதற்காக விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

Advertisement

வரும் தேர்தலில் திமுக-தவெக இடையே தான் போட்டி என்று தவெக.,வினர் கூறி வரும் நிலையில், விஜய் எந்தெத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டால் அது விவிஐபி தொகுதியாகும் என்று தவெகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இந்த நிலையில், தற்போது மீண்டும் தவெக.,வினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

Advertisement

தெற்கில் இருந்து திருப்பம் – நீங்களே முதலமைச்சர் என்பது மக்களின் விருப்பம் என அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

உக்கடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8-வது வார்டு தவெக.,வினர் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். தமிழக மக்களின் காப்பாளராகவும், தொகுதி வேட்பாளராகவும் விஜய் கோவை தெற்குத் தொகுதியில் களம் காண வேண்டும் என தொண்டர்கள் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

கடந்த சில நாட்களாகவே விஜய்யின் அரசியல் நகர்வுகள் உற்று நோக்கப்பட்டு வரும் நிலையில், கோவை போன்ற ஒரு முக்கிய தொழில் நகரத்தில் தொண்டர்கள் இத்தகைய போஸ்டர்களை ஒட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டர்களின் இந்த விருப்பத்திற்கு கட்சித் தலைமை என்ன பதில் சொல்லப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் சகதியில் சிக்கிய சரக்கு வாகனம்… வடவள்ளியில் 3 வாரங்களாக எரியாத தெருவிளக்குகள்!

கோவை சின்னவேடம்பட்டியில் பாதாள சாக்கடைப் பணிக்காகத் தோண்டப்பட்ட சாலை, மழையால் சேறும் சகதியுமாக மாறியதால் சரக்கு வாகனம் ஒன்று சிக்கியது. இதேபோல், வடவள்ளியில் மூன்று வாரங்களுக்கும் மேலாகத் தெருவிளக்குகள் எரியாததால் சிரமப்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...